Emergency

Abirami Lifeline

வெளியே எட்டிப்‌ பார்க்கிறதா குடல்‌?

டாக்டர்‌ செந்தில்‌,

அபிராமி மருத்துவமனை,

கோவை.

பிளாஸ்டிக்‌ பையில்‌ நாலைந்து சாமான்களை வாங்கி இருப்போம்‌. கூடுதலாக ஒன்றை வாங்கிப்‌போடும்போது திடீரென ஒரு பக்கம்‌ பலவீனமாகி இழிந்து… பைக்குள்‌ இருக்கும்‌ சாமான்‌ வெளியேஎட்டிப்பார்க்கும்‌. அது போலவே வயிற்றின்‌ தசையில்‌ எங்காவது பலவீனம்‌ ஏற்படும்போது,வயிறுக்குள்‌ இருக்கும்‌ ஏதாவது ஒரு உறுப்பு அல்லது உறுப்பின்‌ ஒரு பகுதி வெளியில்‌ எட்டிப்‌பார்ப்பதைத்தான்‌ ஹெர்னியா என்கிறோம்‌. இதனை தமிழில்‌ குடல்‌ இறக்கம்‌ அல்லது குடல்‌பிதுக்கம்‌ என்று சொல்லலாம்‌.

ஹெர்னியா பிறவியில்‌ ஏற்படவும்‌ வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன்‌ தொப்புள்‌ கொடியில்‌புண்‌ ஏற்படுவதால்‌ தொப்புள்‌ பிதுக்கம்‌ ஏற்படலாம்‌. இதற்கு உடனடி சிகிச்சை எதுவும்‌தேவையில்லை. ஏனென்றால்‌ தசை வளர்ச்சி காரணமாக தானாகவே சரியாகிவிடும்‌. அதன்‌ பிறகுபெரும்பாலும்‌ 30 வயதில்‌ இருந்து 50 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த நோய்‌ அதிகமாகத்‌தோன்றுகிறது. குறிப்பாக உடல்‌ பருமனாக இருப்பவர்களுக்கும்‌, வயிறு தசைகள்‌ வலுவிழந்துபோனவர்களுக்கும்‌, அடிக்கடி தாய்மை அடைந்தவர்களுக்கும்‌, சமீபத்தில்‌ அறுவை சிகிச்சைசெய்துகொண்டவர்களுக்கும்‌ இந்தப்‌ பிரச்னை உண்டாகிறது. ஆண்களை விட பெண்கள்‌ ஐந்துமடங்கு அதிகமாக இந்த நோயினால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌.பெண்களை மிரட்டும்‌ ஹெர்னியா!

குடல்‌ இறக்கத்தில்‌ முதல்‌ வகை என்று இன்சிஷினல்‌ ஹெர்னியாவைச்‌ 068108! 11618)சொல்லலாம்‌. இது பெரும்பாலும்‌ பெண்களையே குறிவைத்து தாக்குகின்றது. உடல்‌ பருமன்‌,அறுவை சிகிச்சை செய்தபின்‌ புண்ணில்‌ இரத்தம்‌ கட்டுதல்‌, சீழ்‌ பிடித்தல்‌, அறுவை சலச்சைக்குப்‌பின்‌ இருமல்‌, அறுவை முறையில்‌ தவறு போன்ற காரணங்களால்‌ பிதுக்கம்‌ ஏற்படுகிறது. இந்தவகை இக்கல்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌ அறுவை சிஜிச்சைதான்‌ தீர்வு என்றாலும்‌, தற்காலிகமாக

அடிவயிற்றில்‌ வார்‌ போட்டுக்‌ கொள்ளலாம்‌.

ஆண்களை மிரட்டும்‌ ஹெர்னியா :

இன்ஹுனல்‌ ஹெர்னியா 0ஈ9பரஈ&! 11618) எனப்படும்‌ குடல்‌ இறக்கம்‌ பெரும்பாலும்‌ ஆண்களையேதாக்குகின்றது. இந்த நோய்‌ ஆண்களுக்கு குறிப்பாக விதைகள்‌ இருக்கும்‌ இடத்தில்தான்‌ வருகின்றது.

அதனால்‌ இந்த பகுதியில்‌ வரும்‌ குடல்‌ இறக்கத்தை விரை வீக்கம்‌ என்றும்‌ சொல்வதுண்டு.

இந்த வகைப்‌ பிதுக்கம்‌ எந்த வயதிலும்‌ வரலாம்‌. தொடக்கத்தில்‌ பிதுக்கம்‌ கண்டுபிடிப்பதில்‌மட்டுமே இடர்பாடு இருக்கும்‌. அதாவது நோயாளிகள்‌ அதிகமான வேலை செய்யும்போது,உடற்பயிற்சி செய்யும்போது வலி இடுப்பில்‌ இருந்து விரை வரை பரவுகிறது. இந்த வீக்கம்‌நோயாளியின்‌ பக்கவாட்டிலோ, நேராகவோ பார்ப்பதைவிடத்‌ தோள்பட்டையில்‌ இருந்துபார்த்தால்‌ நன்றாகவே தெரியும்‌. இது நிற்கும்போது பெரிதாகவும்‌, படுக்கும்‌ போது குறைந்துபோனதாகவும்‌ தோன்றும்‌.

அனைவரையும்‌ மிரட்டும்‌ ஹெர்னியா:

பெமாரல்‌ ஹெர்னியா (6௦18 16718) என்று அழைக்கப்படும்‌ பிதுக்கத்தில்‌ இருபாலாரும்‌பாதிக்கப்‌ படுகின்றார்கள்‌. இந்த நோயின்‌ காரணமாக குடல்‌ பிதுங்கிக்‌ கொண்டு அடிவயிற்றில்‌விரை நோக்கி இறங்கக்கூடும்‌. தொப்புளிலும்‌ குடல்‌ பிதுக்கம்‌ ஏற்படக்கூடும்‌. இவை இரண்டும்‌சாதாரணமாகவே பார்த்தால்‌ தெரியக்கூடிய பிதுக்கங்கள்‌ ஆகும்‌. இதே போன்று குடல்‌ அல்லதுஇரைப்பை போன்ற உறுப்புகள்‌ வயிற்றினுள்‌ ஒரு பகுதியில்‌ இருந்து இன்னொரு பகுதிக்குச்‌சென்றுவிடக்‌ கூடும்‌. அதாவது உதரவிதானம்‌ எனப்படும்‌ தசைவழியே இரைப்பை அல்லது குடல்‌மார்புக்‌ கூட்டினுள்ளே செல்லக்கூடும்‌. இது போன்ற பிதுக்கங்களை உடனடியாக கவனிக்கவில்லைஎன்றால்‌ உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்‌.

குடல்‌ இறக்கத்திற்கான காரணங்கள்‌:

* வயிறு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அதிகமாக குடல்‌ இறக்க நோய்‌உண்டாகிறது. ஏனென்றால்‌ அறுவை சிஇிச்சையில்‌ போடப்படும்‌ தையல்‌ நாளடைவில்‌ பலமிழந்துவிடுகின்றது. அந்த பகுதியில்‌ இருக்கும்‌ தசையின்‌ தன்மையும்‌ மென்மையாகி விடுவதால்‌ தையல்‌போடப்பட்ட பகுதியில்‌ உள்ள உறுப்புகள்‌ வயிறுப்‌ பகுதியைத்‌ தள்ளிக்‌ கொண்டு வெளியேவந்துவிடுகின்றன.

* பெண்களுக்கு குழந்தை பிறப்புக்காக செய்யப்படும்‌ சிசேரியனும்‌ ஹெர்னியாவுக்குமுக்கிய காரணமாக விளங்குகின்றது. பெரும்பாலான பெண்கள்‌ இந்தப்‌ பிரச்னையால்தான்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌.

* இலருக்கு ஊளளைச்‌ சதையின்‌ மூலம்‌ வயிறு பெரிதாகிக்‌ கொண்டே வரும்‌. அதனைக்‌கவனிக்காமல்‌ விட்டு வைத்து அல்லது சேலை பாவாடை கொண்டு மூடிக்‌ கொண்டேஇருப்பதாலும்‌ வயிறு தசை பலவீனம்‌ அடைஇன்றது. அந்த நேரத்தில்‌ பிற உறுப்புகள்‌ வயிற்றைக்‌இழித்துக்‌ கொண்டு வெளியே வருகின்றன.

* பெண்களுக்கு கர்ப்பப்பையை அகற்றும்‌ ஹிஸ்டரெக்டமி சிகிச்சையின்‌ காரணமாகவும்‌ குடல்‌இறக்கம்‌ நேரிடுகின்றது.

* அறுவை சிகிச்சை செய்தவர்கள்‌, அந்த காயம்‌ முழுமையாக ஆறுவதற்கு முன்னர்‌ அல்லதுபோடப்பட்ட தையல்‌ முழுமையாக ஓன்றிப்‌ போவதற்கு முன்னர்‌ அதிகமாக இருமுதல்‌ அல்லதுஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்கு அழுத்தம்‌ கொடுப்பதும்‌ இந்த நோய்க்கு அடிப்படைக்‌காரணங்களில்‌ ஒன்றாகி விடுகின்றது.

இது போன்ற காரணங்கள்‌ தவிர அறுவை சிகிச்சையில்‌ தையல்‌ போடப்பட்ட இடத்தில்‌இருந்து தண்ணீர்‌ போன்ற திரவம்‌ வடிதல்‌ அல்லது அதிகமாக அரிப்பு இருந்தால்‌ உடனடியாகமருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்‌.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

உடல்‌ கூடுதல்‌ எடை போட்டுவிடாமல்‌ உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதுதான்‌ இந்தப்‌ பிரச்னை ஏற்படாமல்‌ தடுக்கும்‌ வழியாகும்‌. அதிகமாக மாமிச உணவுகளை உண்பதும்‌, அதிக கலோரி உள்ளஉணவுகளை உட்கொள்வதும்‌ உடல்‌ தசைகளைப்‌ பலவீனமாக்குகிறது. மலச்‌ இக்கல்‌ இருப்பவர்கள்‌மருத்துவர்களிடம்‌ உடனே காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்‌. தேவையின்றி காலம்‌தாழ்த்துதல்‌ கூடாது. அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இருமல்‌ அடிக்கடி வருவதாகத்‌தெரிந்ததால்‌ உடனே மருத்துவரை சந்தித்து சரி செய்துகொள்ள வேண்டும்‌.

சிஇச்சைகள்‌:

வெளியே வரும்‌ பகுதியை கைகளால்‌ உள்ளே தள்ளுவது அல்லது பெல்ட்‌ அணிந்துகொள்வதுநிரந்தரத்‌ தீர்வாக இருப்பது இல்லை. அறுவை சிகிச்சையே முழுமையான தீர்வு தருகிறது.

இந்தப்‌ பிரச்னையைத்‌ இர்ப்பதற்கு ஹெொர்னியோபிளாஸ்டி (161௦018507) அறுவை சிகிச்சைபயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில்‌ வெறுமனே தசைகளை மட்டும்‌ சேர்த்து வைத்துத்‌தைக்காமல்‌, மெஷ்‌ எனப்படும்‌ செயற்கை வலைத்‌ துணி பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைதற்போது லேப்ராஸ்கோபி சிஇச்சையிலும்‌ செய்துவிட முடியும்‌.

இதுதான்‌ ஹெொனியாவுக்கான சிஇிச்சை என்றாலும்‌, இந்த அறுவை சஇகிச்சை செய்யப்பட்டஇடத்தில்‌ மீண்டும்‌ ஹெர்னியா ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும்‌ உண்மையே.

அதனால்‌ அறுவை சஜிச்சை செய்யப்பட்ட பகுதியை கைகளால்‌ அமுக்கவோ அல்லது அந்தப்‌பகுதிக்கு அதிக அழுத்தம்‌ கொடுக்கும்‌ வகையில்‌ கடுமையான வேலை அல்லது உடற்பயிற்சிசெய்வதோ கூடாது. முறையான பாதுகாப்புடன்‌ இருந்தால்‌, ஹெர்னியா மீண்டும்‌ ஏற்பட்டுவிடாமல்‌ தடுத்துவிட முடியும்‌.

 

Scroll to Top