டாக்டர் செந்தில்குமார்
அபிராமி மருத்துவமனை,
கோவை.
ஐரோப்பாவில் இருக்கும் டென்மார்க் நாட்டைத்தான் புற்று நோயின் தலைநகரம் என்றுசொல்கிறார்கள். ஏனென்றால் அந்த நாட்டில், ஒரு லட்சம் பேரில் 320 பேருக்கு புற்று நோய்இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்தநாட்டில் ஆண்களும் பெண்களும் அதிக அளவில் சிகரெட், மது உட்கொள்வது முதல் காரணம்.
இரண்டாவது காரணம், அந்த நாட்டில்தான் அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனைமுழுமையாக செய்யப்படுகிறது.
ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் பெரும்பாலும் முற்றியநிலையில்தான் பலருக்கும் கண்டறியப்படுகிறது. பலர் தங்களுக்குப் புற்று நோய் பாதிப்பு இருப்பதுதெரியாமலே அவதிப்படவும், மரணம் அடையவும் செய்கிறார்கள். புற்று நோய் வந்துவிட்டாலேமரணம் வந்துவிட்டதாகவே பலரும் அச்சப்படுகிறார்கள். முன்கூட்டியே கண்டறியப்பட்டால், புற்றுநோயினால் ஏற்படக்கூடிய மரணத்தைத் தவிர்க்க முடியும் என்பதுதான் உண்மை.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், மாடல் அழகி லிசா ரே, நடிகைகள் கெளதமி, மம்தா மோகன்தாஸ்ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் போன்ற எத்தனையோ பிரபலங்கள் புற்று நோயை வென்றுஇருப்பதை அனைவருமே அறிவோம். அதனால் மற்ற நோய்களைப் போலவே புற்று நோயில்இருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அவசியம் ஆகும். புற்று
நோயில் இருந்து தப்பிக்கும் வழிகளை ஆராயும் முன்னர் புற்று நோய் பற்றிய சில தகவல்களைத்தெரிந்துகொள்ளலாம்.
* “எனக்கெல்லாம் புற்று நோய் வராது! என்று யாருமே உறுதியாகச் சொல்ல முடியாது.
ஏனென்றால் சிறியவர், பெரியவர், ஆண், பெண், பணக்காரர், ஏழை, படித்தவர், படிக்காதவர்என்று எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கக்கூடியதுதான் புற்று நோய்.
* முன்கூட்டியே கண்டறியப்படாத பட்சத்தில்தான், நுரையீரல், வயிறு, கல்லீரல், ரத்தம் மற்றும்மூளை ஆகிய பகுதிகளில் புற்று நோய் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மரணத்தைத்தழுவுகிறார்கள்.
* முற்றிய நிலையில் இருக்கும் புற்று நோயைத் தவிர பெரும்பாலும் அனைத்துமே சிகிச்சை அளித்துகுணமாகக்கூடியதே.
* ஆரம்பகட்டத்தில் புற்று நோய் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும்.
புற்று நோய் என்பது சமீப காலத்தில் தோன்றிய நோய் அல்ல. மனித குலம் தோன்றிய நாள்முதலே இருந்துவருகிறது. ஆனால் இந்த நூற்றாண்டில்தான் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
இதற்கு மனிதர்களின் உணவு முறை மாற்றம், கலாசார மாற்றம், வேலைச் சூழல் மாற்றம், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், மருத்துவஇதிச்சை முறையும் மிகச்சிறந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பதால், புற்று நோய் என்றாலேபயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்கூட்டியே கண்டறிந்து நோயின் தன்மைக்கு ஏற்பகதிர்வீச்சு சிஐிச்சை, வேதியல் சிஇிச்சை, ஹார்மோன் தெரபி, உயிரியல் மருத்துவம் போன்றவைமூலம் குணப்படுத்தமுடியும். மேலும் அறுவை இகிச்சையும் புற்று நோய்க்கு சிறந்த முறையில்பயனளிக்கிறது.
இனி, புற்று நோயில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.
- குடும்ப சூழல்:
குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு பாதிப்பு இருந்தால் அல்லது முன்னோர்கள் யாராவதுபுற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்திருந்தால், வீட்டில் இருக்கும் அனைவருமே குறிப்பிட்டஇடைவெளிகளில் புற்று நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்கானபரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். ஒரு முறை செய்யப்பட்ட பரிசோதனையில்பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டதும், அசட்டையாக இருந்துவிடக் கூடாது. மருத்துவர்
கூறும் இடைவெளிகளில் தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்டால், ஆரம்ப நிலையிலேயேகண்டறிந்து எளிதில் தப்பித்துவிட முடியும்.
- வாழும் சூழல்:
ரசாயனம், அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் நிரம்பிய இடங்களில் வசிக்கவோ அல்லதுபணி செய்யவேண்டிய சூழல் பலருக்கு இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் நிற்பது, உரம்,பூச்சிக்கொல்லி தெளிப்பது, தலைக்கு சாயம் பூசுதல் போன்ற பணியில் இருப்பவர்களும்கண்டிப்பாக குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
3. நச்சு உணவுகள்:
இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் நச்சுப் பொருட்கள்கலந்துள்ளது. பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய்களை நீரில் அலசிய பிறகு சமைத்தாலும்…அபாயம் முழுமையாக நீங்கிவிடுவது இல்லை. அதனால் ஊட்டச்சத்துகள் நிறைந்த இயற்கைஉணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ப்பொருள் நிறைந்த காய்கறிகள்,பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக சூடான உணவு அல்லது அதிக குளிரானபானங்களை உட்கொள்ளவே கூடாது. அது போல் தீய்ந்து போன உணவுகளையும் பூஞ்சைகள்தாக்கிய நாட்பட்ட பொருட்களையும் சாப்பிடவே கூடாது. அதிக காரம், அதிக உப்பு, அதிகஎண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யைமறுபடியும் பயன்படுத்தக்கூடாது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் உட்கொள்ளக் கூடாது.
- போதை அபாயம்:
பான்பராக், புகையிலை, சிகரெட், மது போன்ற அத்தனை போதைப் பொருட்களுமேபுற்று நோயை உருவாக்குவதில் அதிக பங்கெடுக்கின்றன. அப்படியென்றால் மது குடிக்கும்அனைவருக்கும் புற்று நோய் வந்துவிடுமா என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. வாய்ப் புற்று நோய்மற்றும் நுரையீரல் புற்று நோய் மற்றும் கல்லீரல் புற்று நோய்க்கு 90 சதவிகிதம் வரை போதைப்பொருட்களே காரணமாக அமைஇின்றன.
5. மருந்துகள் ஜாக்கிரதை:
வலி நிவாரணிகள் போன்ற சில மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல்தொடர்ந்து உட்கொண்டு வருவதும் புற்றுநோய் ஆபத்தை வரவழைத்துவிடும். சுயமருத்துவமும்,தாமதமாக மேற்கொள்ளும் சிகிச்சையும் புற்றுநோய் ஆபத்தை உருவாக்கலாம். பதட்டம், மனஅழுத்தம், டென்ஷன் ஏற்படும்போது உடனே மருத்துவரிடம் சிஇிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இது போன்ற காரணங்களைத் தவிர்ப்பதுடன் அழ்ந்த தூக்கம், எளிய உடற்பயிற்சி, முறையானபரிசோதனை போன்றவற்றைமேற்கொள்ளும் பட்சத்தில் அனைவருமே புற்று நோய் ஆபத்தில்இருந்து விடுபட முடியும்.