Emergency

Abirami Lifeline

January 2025

Uncategorized

வெளியே எட்டிப்‌ பார்க்கிறதா குடல்‌?

டாக்டர்‌ செந்தில்‌, அபிராமி மருத்துவமனை, கோவை. பிளாஸ்டிக்‌ பையில்‌ நாலைந்து சாமான்களை வாங்கி இருப்போம்‌. கூடுதலாக ஒன்றை வாங்கிப்‌போடும்போது திடீரென ஒரு பக்கம்‌ பலவீனமாகி இழிந்து… பைக்குள்‌ இருக்கும்‌ சாமான்‌ வெளியேஎட்டிப்பார்க்கும்‌. அது போலவே வயிற்றின்‌ தசையில்‌ எங்காவது பலவீனம்‌ ஏற்படும்போது,வயிறுக்குள்‌ இருக்கும்‌ ஏதாவது ஒரு உறுப்பு அல்லது உறுப்பின்‌ ஒரு பகுதி வெளியில்‌ எட்டிப்‌பார்ப்பதைத்தான்‌ ஹெர்னியா என்கிறோம்‌. இதனை தமிழில்‌ குடல்‌ இறக்கம்‌ அல்லது குடல்‌பிதுக்கம்‌ என்று சொல்லலாம்‌. ஹெர்னியா பிறவியில்‌ ஏற்படவும்‌ வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன்‌ தொப்புள்‌ கொடியில்‌புண்‌ ஏற்படுவதால்‌ தொப்புள்‌ பிதுக்கம்‌ ஏற்படலாம்‌. இதற்கு உடனடி சிகிச்சை எதுவும்‌தேவையில்லை. ஏனென்றால்‌ தசை வளர்ச்சி காரணமாக தானாகவே சரியாகிவிடும்‌. அதன்‌ பிறகுபெரும்பாலும்‌ 30 வயதில்‌ இருந்து 50 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த நோய்‌ அதிகமாகத்‌தோன்றுகிறது. குறிப்பாக உடல்‌ பருமனாக இருப்பவர்களுக்கும்‌, வயிறு தசைகள்‌ வலுவிழந்துபோனவர்களுக்கும்‌, அடிக்கடி தாய்மை அடைந்தவர்களுக்கும்‌, சமீபத்தில்‌ அறுவை சிகிச்சைசெய்துகொண்டவர்களுக்கும்‌ இந்தப்‌ பிரச்னை உண்டாகிறது. ஆண்களை விட பெண்கள்‌ ஐந்துமடங்கு அதிகமாக இந்த நோயினால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌.பெண்களை மிரட்டும்‌ ஹெர்னியா! குடல்‌ இறக்கத்தில்‌ முதல்‌ வகை என்று இன்சிஷினல்‌ ஹெர்னியாவைச்‌ 068108! 11618)சொல்லலாம்‌. இது பெரும்பாலும்‌ பெண்களையே குறிவைத்து தாக்குகின்றது. உடல்‌ பருமன்‌,அறுவை சிகிச்சை செய்தபின்‌ புண்ணில்‌ இரத்தம்‌ கட்டுதல்‌, சீழ்‌ பிடித்தல்‌, அறுவை சலச்சைக்குப்‌பின்‌ இருமல்‌, அறுவை முறையில்‌ தவறு போன்ற காரணங்களால்‌ பிதுக்கம்‌ ஏற்படுகிறது. இந்தவகை இக்கல்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌ அறுவை சிஜிச்சைதான்‌ தீர்வு என்றாலும்‌, தற்காலிகமாக அடிவயிற்றில்‌ வார்‌ போட்டுக்‌ கொள்ளலாம்‌. ஆண்களை மிரட்டும்‌ ஹெர்னியா : இன்ஹுனல்‌ ஹெர்னியா 0ஈ9பரஈ&! 11618) எனப்படும்‌ குடல்‌ இறக்கம்‌ பெரும்பாலும்‌ ஆண்களையேதாக்குகின்றது. இந்த நோய்‌ ஆண்களுக்கு குறிப்பாக விதைகள்‌ இருக்கும்‌ இடத்தில்தான்‌ வருகின்றது. அதனால்‌ இந்த பகுதியில்‌ வரும்‌ குடல்‌ இறக்கத்தை விரை வீக்கம்‌ என்றும்‌ சொல்வதுண்டு. இந்த வகைப்‌ பிதுக்கம்‌ எந்த வயதிலும்‌ வரலாம்‌. தொடக்கத்தில்‌ பிதுக்கம்‌ கண்டுபிடிப்பதில்‌மட்டுமே இடர்பாடு இருக்கும்‌. அதாவது நோயாளிகள்‌ அதிகமான வேலை செய்யும்போது,உடற்பயிற்சி செய்யும்போது வலி இடுப்பில்‌ இருந்து விரை வரை பரவுகிறது. இந்த வீக்கம்‌நோயாளியின்‌ பக்கவாட்டிலோ, நேராகவோ பார்ப்பதைவிடத்‌ தோள்பட்டையில்‌ இருந்துபார்த்தால்‌ நன்றாகவே தெரியும்‌. இது நிற்கும்போது பெரிதாகவும்‌, படுக்கும்‌ போது குறைந்துபோனதாகவும்‌ தோன்றும்‌. அனைவரையும்‌ மிரட்டும்‌ ஹெர்னியா: பெமாரல்‌ ஹெர்னியா (6௦18 16718) என்று அழைக்கப்படும்‌ பிதுக்கத்தில்‌ இருபாலாரும்‌பாதிக்கப்‌ படுகின்றார்கள்‌. இந்த நோயின்‌ காரணமாக குடல்‌ பிதுங்கிக்‌ கொண்டு அடிவயிற்றில்‌விரை நோக்கி இறங்கக்கூடும்‌. தொப்புளிலும்‌ குடல்‌ பிதுக்கம்‌ ஏற்படக்கூடும்‌. இவை இரண்டும்‌சாதாரணமாகவே பார்த்தால்‌ தெரியக்கூடிய பிதுக்கங்கள்‌ ஆகும்‌. இதே போன்று குடல்‌ அல்லதுஇரைப்பை போன்ற உறுப்புகள்‌ வயிற்றினுள்‌ ஒரு பகுதியில்‌ இருந்து இன்னொரு பகுதிக்குச்‌சென்றுவிடக்‌ கூடும்‌. அதாவது உதரவிதானம்‌ எனப்படும்‌ தசைவழியே இரைப்பை அல்லது குடல்‌மார்புக்‌ கூட்டினுள்ளே செல்லக்கூடும்‌. இது போன்ற பிதுக்கங்களை உடனடியாக கவனிக்கவில்லைஎன்றால்‌ உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்‌. குடல்‌ இறக்கத்திற்கான காரணங்கள்‌: * வயிறு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அதிகமாக குடல்‌ இறக்க நோய்‌உண்டாகிறது. ஏனென்றால்‌ அறுவை சிஇிச்சையில்‌ போடப்படும்‌ தையல்‌ நாளடைவில்‌ பலமிழந்துவிடுகின்றது. அந்த பகுதியில்‌ இருக்கும்‌ தசையின்‌ தன்மையும்‌ மென்மையாகி விடுவதால்‌ தையல்‌போடப்பட்ட பகுதியில்‌ உள்ள உறுப்புகள்‌ வயிறுப்‌ பகுதியைத்‌ தள்ளிக்‌ கொண்டு வெளியேவந்துவிடுகின்றன. * பெண்களுக்கு குழந்தை பிறப்புக்காக செய்யப்படும்‌ சிசேரியனும்‌ ஹெர்னியாவுக்குமுக்கிய காரணமாக விளங்குகின்றது. பெரும்பாலான பெண்கள்‌ இந்தப்‌ பிரச்னையால்தான்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. * இலருக்கு ஊளளைச்‌ சதையின்‌ மூலம்‌ வயிறு பெரிதாகிக்‌ கொண்டே வரும்‌. அதனைக்‌கவனிக்காமல்‌ விட்டு வைத்து அல்லது சேலை பாவாடை கொண்டு மூடிக்‌ கொண்டேஇருப்பதாலும்‌ வயிறு தசை பலவீனம்‌ அடைஇன்றது. அந்த நேரத்தில்‌ பிற உறுப்புகள்‌ வயிற்றைக்‌இழித்துக்‌ கொண்டு வெளியே வருகின்றன. * பெண்களுக்கு கர்ப்பப்பையை அகற்றும்‌ ஹிஸ்டரெக்டமி சிகிச்சையின்‌ காரணமாகவும்‌ குடல்‌இறக்கம்‌ நேரிடுகின்றது. * அறுவை சிகிச்சை செய்தவர்கள்‌, அந்த காயம்‌ முழுமையாக ஆறுவதற்கு முன்னர்‌ அல்லதுபோடப்பட்ட தையல்‌ முழுமையாக ஓன்றிப்‌ போவதற்கு முன்னர்‌ அதிகமாக இருமுதல்‌ அல்லதுஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்கு அழுத்தம்‌ கொடுப்பதும்‌ இந்த நோய்க்கு அடிப்படைக்‌காரணங்களில்‌ ஒன்றாகி விடுகின்றது. இது போன்ற காரணங்கள்‌ தவிர அறுவை சிகிச்சையில்‌ தையல்‌ போடப்பட்ட இடத்தில்‌இருந்து தண்ணீர்‌ போன்ற திரவம்‌ வடிதல்‌ அல்லது அதிகமாக அரிப்பு இருந்தால்‌ உடனடியாகமருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்‌. முன்னெச்சரிக்கை நடவடிக்கை! உடல்‌ கூடுதல்‌ எடை போட்டுவிடாமல்‌ உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதுதான்‌ இந்தப்‌ பிரச்னை ஏற்படாமல்‌ தடுக்கும்‌ வழியாகும்‌. அதிகமாக மாமிச உணவுகளை உண்பதும்‌, அதிக கலோரி உள்ளஉணவுகளை உட்கொள்வதும்‌ உடல்‌ தசைகளைப்‌ பலவீனமாக்குகிறது. மலச்‌ இக்கல்‌ இருப்பவர்கள்‌மருத்துவர்களிடம்‌ உடனே காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்‌. தேவையின்றி காலம்‌தாழ்த்துதல்‌ கூடாது. அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இருமல்‌ அடிக்கடி வருவதாகத்‌தெரிந்ததால்‌ உடனே மருத்துவரை சந்தித்து சரி செய்துகொள்ள வேண்டும்‌. சிஇச்சைகள்‌: வெளியே வரும்‌ பகுதியை கைகளால்‌ உள்ளே தள்ளுவது அல்லது பெல்ட்‌ அணிந்துகொள்வதுநிரந்தரத்‌ தீர்வாக இருப்பது இல்லை. அறுவை சிகிச்சையே முழுமையான தீர்வு தருகிறது. இந்தப்‌ பிரச்னையைத்‌ இர்ப்பதற்கு ஹெொர்னியோபிளாஸ்டி (161௦018507) அறுவை சிகிச்சைபயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில்‌ வெறுமனே தசைகளை மட்டும்‌ சேர்த்து வைத்துத்‌தைக்காமல்‌, மெஷ்‌ எனப்படும்‌ செயற்கை வலைத்‌ துணி பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைதற்போது லேப்ராஸ்கோபி சிஇச்சையிலும்‌ செய்துவிட முடியும்‌. இதுதான்‌ ஹெொனியாவுக்கான சிஇிச்சை என்றாலும்‌, இந்த அறுவை சஇகிச்சை செய்யப்பட்டஇடத்தில்‌ மீண்டும்‌ ஹெர்னியா ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும்‌ உண்மையே. அதனால்‌ அறுவை சஜிச்சை செய்யப்பட்ட பகுதியை கைகளால்‌ அமுக்கவோ அல்லது அந்தப்‌பகுதிக்கு அதிக அழுத்தம்‌ கொடுக்கும்‌ வகையில்‌ கடுமையான வேலை அல்லது உடற்பயிற்சிசெய்வதோ கூடாது. முறையான பாதுகாப்புடன்‌ இருந்தால்‌, ஹெர்னியா மீண்டும்‌ ஏற்பட்டுவிடாமல்‌ தடுத்துவிட முடியும்‌.  

Uncategorized

புற்று நோயில்‌ இருந்து தப்பிக்க ஆசையா?

டாக்டர்‌ செந்தில்குமார்‌ அபிராமி மருத்துவமனை, கோவை. ஐரோப்பாவில்‌ இருக்கும்‌ டென்மார்க்‌ நாட்டைத்தான்‌ புற்று நோயின்‌ தலைநகரம்‌ என்றுசொல்கிறார்கள்‌. ஏனென்றால்‌ அந்த நாட்டில்‌, ஒரு லட்சம்‌ பேரில்‌ 320 பேருக்கு புற்று நோய்‌இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள்‌ சொல்லப்படுகிறது. அந்தநாட்டில்‌ ஆண்களும்‌ பெண்களும்‌ அதிக அளவில்‌ சிகரெட்‌, மது உட்கொள்வது முதல்‌ காரணம்‌. இரண்டாவது காரணம்‌, அந்த நாட்டில்தான்‌ அனைவருக்கும்‌ புற்று நோய்‌ பரிசோதனைமுழுமையாக செய்யப்படுகிறது. ஆனால்‌, இந்தியா போன்ற வளர்ந்து வரும்‌ நாடுகளில்‌ புற்று நோய்‌ பெரும்பாலும்‌ முற்றியநிலையில்தான்‌ பலருக்கும்‌ கண்டறியப்படுகிறது. பலர்‌ தங்களுக்குப்‌ புற்று நோய்‌ பாதிப்பு இருப்பதுதெரியாமலே அவதிப்படவும்‌, மரணம்‌ அடையவும்‌ செய்கிறார்கள்‌. புற்று நோய்‌ வந்துவிட்டாலேமரணம்‌ வந்துவிட்டதாகவே பலரும்‌ அச்சப்படுகிறார்கள்‌. முன்கூட்டியே கண்டறியப்பட்டால்‌, புற்றுநோயினால்‌ ஏற்படக்கூடிய மரணத்தைத்‌ தவிர்க்க முடியும்‌ என்பதுதான்‌ உண்மை. கிரிக்கெட்‌ வீரர்‌ யுவராஜ்‌ சிங்‌, மாடல்‌ அழகி லிசா ரே, நடிகைகள்‌ கெளதமி, மம்தா மோகன்தாஸ்‌ஹாலிவுட்‌ நடிகர்‌ மைக்கேல்‌ டக்ளஸ்‌ போன்ற எத்தனையோ பிரபலங்கள்‌ புற்று நோயை வென்றுஇருப்பதை அனைவருமே அறிவோம்‌. அதனால்‌ மற்ற நோய்களைப்‌ போலவே புற்று நோயில்‌இருந்தும்‌ தப்பித்துக்கொள்ள முடியும்‌ என்ற நம்பிக்கை அனைவருக்கும்‌ அவசியம்‌ ஆகும்‌. புற்று நோயில்‌ இருந்து தப்பிக்கும்‌ வழிகளை ஆராயும்‌ முன்னர்‌ புற்று நோய்‌ பற்றிய சில தகவல்களைத்‌தெரிந்துகொள்ளலாம்‌. * “எனக்கெல்லாம்‌ புற்று நோய்‌ வராது! என்று யாருமே உறுதியாகச்‌ சொல்ல முடியாது. ஏனென்றால்‌ சிறியவர்‌, பெரியவர்‌, ஆண்‌, பெண்‌, பணக்காரர்‌, ஏழை, படித்தவர்‌, படிக்காதவர்‌என்று எந்த ஒரு பாகுபாடும்‌ பார்க்காமல்‌ அனைவரையும்‌ பாதிக்கக்கூடியதுதான்‌ புற்று நோய்‌. * முன்கூட்டியே கண்டறியப்படாத பட்சத்தில்தான்‌, நுரையீரல்‌, வயிறு, கல்லீரல்‌, ரத்தம்‌ மற்றும்‌மூளை ஆகிய பகுதிகளில்‌ புற்று நோய்‌ தாக்கப்பட்டவர்கள்‌ பெரும்பாலும்‌ மரணத்தைத்‌தழுவுகிறார்கள்‌. * முற்றிய நிலையில்‌ இருக்கும்‌ புற்று நோயைத்‌ தவிர பெரும்பாலும்‌ அனைத்துமே சிகிச்சை அளித்துகுணமாகக்கூடியதே. * ஆரம்பகட்டத்தில்‌ புற்று நோய்‌ கண்டறியப்பட்டால்‌ எளிதில்‌ குணப்படுத்த முடியும்‌. புற்று நோய்‌ என்பது சமீப காலத்தில்‌ தோன்றிய நோய்‌ அல்ல. மனித குலம்‌ தோன்றிய நாள்‌முதலே இருந்துவருகிறது. ஆனால்‌ இந்த நூற்றாண்டில்தான்‌ அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு மனிதர்களின்‌ உணவு முறை மாற்றம்‌, கலாசார மாற்றம்‌, வேலைச்‌ சூழல்‌ மாற்றம்‌, பருவநிலை மாற்றம்‌ போன்ற பல்வேறு காரணங்கள்‌ சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால்‌, மருத்துவஇதிச்சை முறையும்‌ மிகச்சிறந்த அளவுக்கு முன்னேற்றம்‌ அடைந்திருப்பதால்‌, புற்று நோய்‌ என்றாலேபயப்பட வேண்டிய அவசியம்‌ இல்லை. முன்கூட்டியே கண்டறிந்து நோயின்‌ தன்மைக்கு ஏற்பகதிர்வீச்சு சிஐிச்சை, வேதியல்‌ சிஇிச்சை, ஹார்மோன்‌ தெரபி, உயிரியல்‌ மருத்துவம்‌ போன்றவைமூலம்‌ குணப்படுத்தமுடியும்‌. மேலும்‌ அறுவை இகிச்சையும்‌ புற்று நோய்க்கு சிறந்த முறையில்‌பயனளிக்கிறது. இனி, புற்று நோயில்‌ இருந்து தப்பிக்கும்‌ வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்‌. குடும்ப சூழல்‌: குடும்பத்தில்‌ யாருக்கேனும்‌ ஒருவருக்கு பாதிப்பு இருந்தால்‌ அல்லது முன்னோர்கள்‌ யாராவதுபுற்று நோயினால்‌ பாதிக்கப்பட்டு இறந்திருந்தால்‌, வீட்டில்‌ இருக்கும்‌ அனைவருமே குறிப்பிட்டஇடைவெளிகளில்‌ புற்று நோய்‌ பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்கானபரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்‌. ஒரு முறை செய்யப்பட்ட பரிசோதனையில்‌பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டதும்‌, அசட்டையாக இருந்துவிடக்‌ கூடாது. மருத்துவர்‌ கூறும்‌ இடைவெளிகளில்‌ தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்டால்‌, ஆரம்ப நிலையிலேயேகண்டறிந்து எளிதில்‌ தப்பித்துவிட முடியும்‌. வாழும்‌ சூழல்‌: ரசாயனம்‌, அமிலம்‌ போன்ற வேதிப்பொருட்கள்‌ நிரம்பிய இடங்களில்‌ வசிக்கவோ அல்லதுபணி செய்யவேண்டிய சூழல்‌ பலருக்கு இருக்கலாம்‌. அதிக நேரம்‌ வெயிலில்‌ நிற்பது, உரம்‌,பூச்சிக்கொல்லி தெளிப்பது, தலைக்கு சாயம்‌ பூசுதல்‌ போன்ற பணியில்‌ இருப்பவர்களும்‌கண்டிப்பாக குறிப்பிட்ட இடைவெளிகளில்‌ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்‌. 3. நச்சு உணவுகள்‌: இன்று நாம்‌ உட்கொள்ளும்‌ பெரும்பாலான உணவுப்‌ பொருட்களில்‌ நச்சுப்‌ பொருட்கள்‌கலந்துள்ளது. பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய்களை நீரில்‌ அலசிய பிறகு சமைத்தாலும்‌…அபாயம்‌ முழுமையாக நீங்கிவிடுவது இல்லை. அதனால்‌ ஊட்டச்சத்துகள்‌ நிறைந்த இயற்கைஉணவுகளை அதிகம்‌ எடுத்துக்கொள்ள வேண்டும்‌. குறிப்பாக நார்ப்பொருள்‌ நிறைந்த காய்கறிகள்‌,பழங்களை அதிகம்‌ உட்கொள்ள வேண்டும்‌. அதிக சூடான உணவு அல்லது அதிக குளிரானபானங்களை உட்கொள்ளவே கூடாது. அது போல்‌ தீய்ந்து போன உணவுகளையும்‌ பூஞ்சைகள்‌தாக்கிய நாட்பட்ட பொருட்களையும்‌ சாப்பிடவே கூடாது. அதிக காரம்‌, அதிக உப்பு, அதிகஎண்ணெய்‌ போன்றவற்றைத்‌ தவிர்க்க வேண்டும்‌. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யைமறுபடியும்‌ பயன்படுத்தக்கூடாது. எண்ணெய்யில்‌ பொரித்த உணவுகளையும்‌ உட்கொள்ளக்‌ கூடாது. போதை அபாயம்‌: பான்பராக்‌, புகையிலை, சிகரெட்‌, மது போன்ற அத்தனை போதைப்‌ பொருட்களுமேபுற்று நோயை உருவாக்குவதில்‌ அதிக பங்கெடுக்கின்றன. அப்படியென்றால்‌ மது குடிக்கும்‌அனைவருக்கும்‌ புற்று நோய்‌ வந்துவிடுமா என்று கேட்பதில்‌ அர்த்தம்‌ இல்லை. வாய்ப்‌ புற்று நோய்‌மற்றும்‌ நுரையீரல்‌ புற்று நோய்‌ மற்றும்‌ கல்லீரல்‌ புற்று நோய்க்கு 90 சதவிகிதம்‌ வரை போதைப்‌பொருட்களே காரணமாக அமைஇின்றன. 5. மருந்துகள்‌ ஜாக்கிரதை: வலி நிவாரணிகள்‌ போன்ற சில மருந்துகளை மருத்துவர்களின்‌ ஆலோசனை இல்லாமல்‌தொடர்ந்து உட்கொண்டு வருவதும்‌ புற்றுநோய்‌ ஆபத்தை வரவழைத்துவிடும்‌. சுயமருத்துவமும்‌,தாமதமாக மேற்கொள்ளும்‌ சிகிச்சையும்‌ புற்றுநோய்‌ ஆபத்தை உருவாக்கலாம்‌. பதட்டம்‌, மனஅழுத்தம்‌, டென்ஷன்‌ ஏற்படும்போது உடனே மருத்துவரிடம்‌ சிஇிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்‌.இது போன்ற காரணங்களைத்‌ தவிர்ப்பதுடன்‌ அழ்ந்த தூக்கம்‌, எளிய உடற்பயிற்சி, முறையானபரிசோதனை போன்றவற்றைமேற்கொள்ளும்‌ பட்சத்தில்‌ அனைவருமே புற்று நோய்‌ ஆபத்தில்‌இருந்து விடுபட முடியும்‌.

Uncategorized

பித்தப்பையை முழுமையாக அகற்றலாமா?

டாக்டர் செந்தில், அபிராமி மருத்துவமனை, கோவை. மனித உடலில் இருக்கும் தேவை இல்லாத ஓர் உறுப்பு. சின்னஞ்சிறிய உறுப்பு என்றாலும் அதில் பிரச்னை ஏற்படும் நேரத்தில் வலி உயிரே போவது போல் இருக்கும். இப்போது எந்த உறுப்பு என்பதை யூகித்து இருப்பீர்கள். ஆம், பித்தப்பை (Gall bladar) என்ற உறுப்புதான் அது. இது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை (bile) தற்காலிகமாக சேகரித்து வைக்கிறது. இந்தப் பித்தப்பை சுருங்கும் போது, இதில் இருக்கும் பித்த நீர் சிறுகுடலுக்குச் செல்கிறது. இந்த பித்த நீர்தான் குடலின் செரிமானத்துக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் போது கற்கள் உருவாகி, பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது. கற்கள் உருவாதல்: பித்தப்பையில் ஏற்படும் முக்கியமான பிரச்னை கற்கள் உருவாவதுதான். சாப்பிடும் போது உணவில் இருக்கும் கற்களைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், பித்தப்பையில் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்படத் தேவை இல்லை. இந்தப் பித்தப் பை கற்கள் என்பது சிறு கற்கள் போன்ற ஒரு படிமானப் பொருள். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை கொலஸ்ரோல் கற்கள். இது உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு உருவாகிறது. குறிப்பாக உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் திடீரென்று உடல் இளைப்பவர்களுக்கும் இந்தக் கற்கள் உருவாகிறது. மேலும் கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் ஏற்படுகின்றன. கொலஸ்ரோல் என்ற கொழுப்புப் பொருள் அதிகமாக உள்ளதால் இவ் வகைக் கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இரண்டாவது பித்தச் சாயத்தில் இருந்து உருவாகும் பிக்மென்ட் கற்கள். இது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ அல்லது பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ உண்டாகின்றன. மூன்றாவது வகையானது கொலஸ்ரோல் மற்றும் பித்தச் சாயம் இரண்டும் சேர்ந்து உருவாவது ஆகும். இந்தப் பிரச்னையில் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்குப் பித்தப்பை கற்கள் உருவாவதற்கான காரணங்களை ஆங்கிலத்தில் பைஃவ் எஃப் (5 தி) என்று கூறுவார்கள். பெண்கள் (Female) உடல் பருமன் (Fatty) வாயுத் தொல்லை (Flatulent) குழந்தைப் பேறு (Fertile) நாற்பது வயது (Forty) பெண்களுக்கு இந்த ஐந்து காரணங்களும் இருக்கும்போது, பித்தப் பையில் கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தக் கற்களை அல்ட்ரா சவுண்டு சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். பித்தப் பையில் கற்கள் இருக்கின்றன என்று தெரிந்த பின்பு முழுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உணவில் எண்ணெய், கொழுப்புப் பொருட்கள் சேர்வதை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோருக்குமே, பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. அதாவது பித்தப் பைக் கற்கள் உள்ளவர்களில் சிலருக்கு எந்த பாதிப்புமே இல்லாமல் இயல்பாக இருப்பார்கள். கற்களின் எண்ணிக்கை கூடும்போதும், வேறு பிரச்னைகள் தோன்றும்போதுதான் அவர்களைப் பாதிக்கும். பித்தப்பையில் கற்கள் தோன்றுவதால் பித்தப்பையில் கிருமித் தோற்று, பித்தக் குழாயில் அடைப்பு, பித்தப் பையில் அழற்சி போன்றவை ஏற்படலாம். பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள் கற்கள் உருவாகி இருக்கும் பட்சத்தில் வயிற்றில் மிகக் கடினமான வலி உண்டாகும். வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் வலி இருந்துகொண்டே இருக்கும். இதனை அல்சர் என்று பலரும் தவறாக நினைத்து மருந்து சாப்பிடுவார்கள். வலி குறையாத பட்சத்தில்தான் இந்த பித்தப்பைக் கற்கள் கண்டறியப்படுகிறது. பசி உணர்வு இல்லாமல் இருப்பது, அடிக்கடி ஏப்பம், அஜீரணம், வயிறு உப்புசம் ஏற்படுவதும் அறிகுறிகளே. தொடர்ந்து வாயுத் தொல்லை இருப்பதும், தொடர் காய்ச்சலும் பித்தப்பை கற்களின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. மேலும் மஞ்சள் காமாலை தோன்றும் பட்சத்தில் பித்தப்பைக் கற்களை பரிசோதனை செய்துபார்க்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை உடனடியாக கவனிக்கவில்லை என்றால் இந்தக் கற்கள், பித்த நாளத்தில் விழுந்து அடைத்துக் கொள்ளும். இதனால் மஞ்சள் காமாலை உண்டாகவும் வாய்ப்புள்ளது. கணைய அழற்சி, சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பித்தக் கற்கள் அகற்றப்படாத சூழலில், இது புற்று நோய்க் கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு. சிகிச்சை முறை: பித்தப் பை கற்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கண்டறியப்பட்டால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், பித்தப்பை அழுகி வெடித்துவிட வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடும். பொதுவாக பித்தப்பை கற்களுக்கு மருந்துகள் சரியான முறையில் பலன் கொடுப்பது இல்லை. மாத்திரைகள் சாப்பிடும் வரை கற்கள் மறைந்து… வலி இல்லாமல் இருக்கும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடனே வலி உருவாகி, கற்கள் திரும்பவும் உண்டாகி அதிக அளவில் வேதனை கொடுக்கும். இந்த மாத்திரைகள் விலை அதிகமானவை என்பதுடன் பக்கவிளைவுகளும் உருவாக்குபவை என்பதால், இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதன் காரண்மாக கல்லீரலில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் பித்தப்பையில் கற்கள் கண்டறியப்பட்டால், அதனை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதுதான் நல்லது. பித்தப் பைக் குழாயின் கீழ்ப் பகுதியில் மட்டும் கற்கள் உள்ளவர்களுக்கு, நேரடியாக கற்களை மட்டுமே அகற்றலாம். தோயானியின் வாய் வழியாக கேமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி, கற்களை அகற்றிவிட முடியும். சுற்கள் மற்ற பகுதியிலும் இருந்தால் பித்தப்பையை முழுமையாக அகற்றுவதுதான் சிறந்தது. ஏனெனில் பித்தப் பை சுருங்கி விரியாமல் கெட்டுப் போவதால்தான் இவ்வாறு கற்கள் உற்பத்தியாகின்றன. இப்படிப் பழுதடைத்த பித்தப் பை உள்னே இருப்பதால் உடல் நலத்துக்கு பல்வேறு கேடுகள்தான் விளையுமே தவிர, நன்மை எதுவும் கிடையாது. அதனால் பித்தப்பையை அகற்றுவதன் காரணமாக எந்தப் பக்கவிளைவும் ஏற்படுவது இல்லை. மேலும்பித்தப் பையை அகற்றுவதால் ஜீரணத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் வயிற்றைக் கிழிக்காமல் மிகச் சிறிய துளைகள் மூலம் கருவிகளை அனுப்பி பித்தப்பையை வெட்டி அகற்றிவிட முடியும். அழுகிப் போன பித்தப் பையையும் இந்த சிகிச்சை முறையில் அகற்றிவிட முடியும். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை காரணமாக நோயாளிக்கு அதிக வலியும் ரத்த இழப்பும் இருக்காது என்பதால் விரைவில் வீடு திரும்பி, வழக்கம் போல் பணிகளைச் செய்ய முடியும். அதனால் வயிற்றின் மேல் பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்… அது பித்தப் பை கற்களாகவும் இருக்கலாம்.

Scroll to Top